[X] Close

எட்டு வழிச்சாலை திட்டம்; வழக்கு செலவுக்கு பணம் வசூலா?- பத்திரிகையாளரிடம் ராமதாஸ் கோபம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:22 am
  • அ+ அ-

எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்குக்கு பாமகவினர் பணம் வாங்கியதாக அறிவில்லாதவர்கள்தான் கூறுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சேலம் வந்த ராமதாஸ், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை அவர் தங்கிய ஹோட்டல் அறையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்து பேசும்போது, “இந்திய மக்கள் அனைவரும் அம்பேத்கர் காட்டிய சமூக ஒற்றுமை மற்றும் நல்லுறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

பாமகவின் ஒரு சதவீதம் வாக்குவங்கியை நாங்கள் பெற்று, தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?

ஸ்டாலின் மனதில் தோன்றுவதை உளறி வருகிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம், ரயில்வே கோட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுகதான் கொண்டு வந்ததாக கூறுகின்றனர். இது அருவருக்கத்தக்க செயல்.

8 வழிச்சாலை வழக்கு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் தலா ரூ.2 ஆயிரம் வரை பணம் பெற்று, பாமக வழக்கு தொடுத்ததாக திமுகவினர் கூறி வருகின்றனரே?

அறிவில்லாதவர்கள்தான் இதுபோன்று சொல்வார்கள்.

இவ்வாறு கோபமாக கூறிய ராமதாஸ், பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close