[X] Close

மக்களவை தேர்தலுக்கு பின்னர்தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கவுள்ளது: ஸ்டாலின் விமர்சனத்துக்கு முதல்வர் பழனிசாமி பதில்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:11 am
  • அ+ அ-

“மக்களவைத் தேர்தலுடன் முதல்வர் பழனிசாமியின் அரசியல் வாழ்வு முடியப்போவதாக” திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த தேர்தலுக்கு பின்னர்தான் எனது அரசியல் வாழ்வே தொடங்கவுள்ளது என்று சேலத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியது:

ஸ்டாலின் செல்லும் பகுதிகளில் எல்லாம், ‘‘அதிமுக என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது’’ என கேள்வி எழுப்பி வருகிறார். அதற்கு சேலத்தில் ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் பாலங்கள்தான் சாட்சி. ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலை, தனி குடிநீர் திட்டம், ரூ.900 கோடியில் சீர்மிகு சேலம், மேட்டூர் உபரி நீர் திட்டம், முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் அந்நிய முதலீடு ஈர்த்ததில் ரூ.3 லட்சத்து 41 கோடி மூலம் 5 லட்சம் இளைஞர்கள் நேரடியாகவும், 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

உணவு பூங்கா, கால்நடை பூங்கா என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியும், நிறைவேற்றுவதற்கான ஆயத்த பணியையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் எனது அரசியல் வாழ்வு முடியப்போவதாக ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த தேர்தலுக்குப் பின்னர்தான் எனது அரசியல் வாழ்வே தொடங்கவுள்ளது.

முதல்வர் கனவில் மிதக்கும் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது. அதிமுகவை உடைக்க, ஆட்சியை கலைக்க திமுக போட்ட திட்டங்கள் எல்லாம் கானல் நீராக மாறிவிட்டன. இவ்வாறு முதல்வர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close