[X] Close

அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள்: அரசியல் கட்சிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மரியாதை


129

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:57 am
  • அ+ அ-

மறைந்த சட்டமேதை அம்பேத் கருக்கு 129-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. அங்கு காலை முதல் மாலை வரை பொதுமக்கள், தொண்டர்கள் திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவர் உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, வடசென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதவிர தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக துணைப்பொது செயலாளர் மல்லை சத்யா, மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், வடசென்னை தேமுதிகவேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், வடசென்னை அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகி களும் அம்பேத்கருக்கு மரியதை செலுத்தினர். இதேபோல், கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் வேல்முருகனும், பெருங்குடி பகுதியில் இருந்த சிலைக்கு தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close