[X] Close

வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் பக்தர்கள் வரவேற்பு


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு தமிழில்அர்ச்சனை செய்வது தொடங்கப்பட் டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதில்லை. சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்து வருகின்றனர். எனவே, அனைத்து கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று முதல் சாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்னை செய்யப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சித்திரை திருநாளின் முதல்நாளான நேற்றுமுதல் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டவுடன் முதல் அர்ச்சனை தமிழில் மேற்கொள்ளப்படும். பிற நேரங்களில் பக்தர்கள் கேட்டு கொண்டால் தமிழில் அர்ச்சனை செய்வோம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close