[X] Close

மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது


2

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:48 am
  • அ+ அ-

மாணவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் (20), தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவியை ஸ்ரீநாத் காதலித்ததாக கூறப்படுகிறது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர். இதை ஸ்ரீநாத்தின் கல்லூரி நண்பரான வேளச்சேரியை சேர்ந்த யோகேஷ் (19), செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தைக் காட்டி தங்கள் ஆசைக்கு இணங்கும்படி மாணவியை இருவரும் வற்புறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று கூறி பணமும் கேட்டுள்ளனர்.

இதனால் பயந்துபோன மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீநாத், யோகேஷ் இருவரையும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close