[X] Close

மத்திய சென்னையில் மாம்பழத்துக்கு இந்தியில் ஓட்டு கேட்ட ஸ்மிருதி இரானி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:46 am
  • அ+ அ-

மத்திய சென்னையில் வட இந்தியவர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பாலை ஆதரித்து இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

மத்திய சென்னை பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பாலை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று திறந்த வேனில் சென்றபடி பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய சென்னை பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பாலை ஆதரித்துவட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிஇந்தியில் பேசி வாக்கு சேகரித்தார். என்.எஸ்.சி. போஸ் சாலை, அங்கப்ப நாயக்கன் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஆடியப்பா தெரு, தங்கசாலை, அம்மன் கோவில் தெரு, வால்டாக்ஸ் சாலையில் ஸ்மிருதி இரானிபிரச்சாரம் செய்தார். அப்போது அவர் இந்தியில் பேசினார்.

அவர் பேசும்போது, “மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று முழக்கம் நாடெங்கும் ஒலிக்கிறது. மீண்டும் மோடி பிரதமராவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மே 23-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராவது உறுதி" என்றார் ஸ்மிருதி இரானி.

பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பால் பேசும்போது, “அதிமுக – பாஜக கூட்டணியில்தான் எளிய மனிதர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அதுபோலத்தான் எளியவனான நான் பாமக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடுகிறேன். அதனால்தான் மத்திய அமைச்சருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close