[X] Close

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தவர்கள் முதல் முறையாக வாக்குரிமையை நிறைவேற்ற காத்திருக்கின்றனர்: ‘சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படுகிறோம்' என மகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:31 am
  • அ+ அ-

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த இருளர்கள் சிலர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கீகரிக்கும் வகையில், சுமார் 50 பேருக்கு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தங்களது ஜனநாயக உரிமையை முதல்முறையாக நிறைவேற்ற, மக்களவைத் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு ஏரிக்கரை ஓரத்தில் குடிசை அமைத்து பாபு(35), அவரது மனைவி காமாட்சி(25), பிரபு(25), அவரது மனைவி ராதிகா(21), பாபுவின் தாத்தா கன்னியப்பன்(65) மற்றும் தாய் கருப்பாயி(65) ஆகியோர் வசித்து வருகின்றனர். விறகுக்கரி சூளையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி “முதல் முறையாக வாக்களிக்க வேண்டும்” என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து பாபு கூறும்போது, “கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. என் தாத்தா உட்பட அனைவரும் முதல்முறையாக வாக்களிக்கப் போகிறோம். கொத்தடிமையாக இருந்த எங்களுக்கும் மக்கள் பிரதிநிதியை தேர்வுசெய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் வாக்கு கேட்டு எந்த வேட்பாளரும் எங்களை தேடி வரவில்லை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close