[X] Close

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் கேரட், தக்காளி விலை உயர்வு


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:34 am
  • அ+ அ-

கோயம்பேடு சந்தையில் கேரட் மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள் ளது. அதன் காரணமாக பல காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட கேரட் நேற்று ரூ.40 ஆக உயர்ந் திருந்தது. ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.30 ஆக உயர்ந்திருந்தது. மேலும் உருளைக்கிழங்கு ரூ.17, முள்ளங்கி ரூ.25, புடலங்காய், முருங்கைக்காய் தலா ரூ.20, பச்சை மிளகாய் ரூ.35 என விலை உயர்ந்திருந்தது.

மற்ற காய்கறிகளான வெங் காயம் ரூ.13, சாம்பார் வெங் காயம் ரூ.30, கத்தரிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.35, வெண்டைக் காய், முட்டைக்கோஸ் தலா ரூ.15, பாகற்காய், பீட்ரூட் தலா ரூ.25, பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

உயர்வு ஏன்?

காய்கறி விலை உயர்ந் திருப்பது தொடர்பாக கோயம் பேடு சந்தை காய்கறி வியாபாரி கள் கூறும்போது, “தற்போது வெயில் அதிகரித்திருப்பதால், பாசன நீர் பற்றாக்குறை, பூக்கள் உதிர்தல் போன்ற காரணங்களால் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதன் காரண மாக பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close