[X] Close

வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அதிமுக: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 21:48 pm
  • அ+ அ-

வெறுப்பை பரப்பும் வகையில் அதிமுக செய்யும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில் ‘‘அதிமுக  மின்னணு ஊடகம் மற்றும் சமூகவலைதளங்கள் வாயிலாக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. எந்தவித ஆதரமும் இன்றி மிக மோசமாக திமுகவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.

‘கைகட்டி வேடிக்கை பார்த்த திமுக, தொப்புள் கோடி உறவுகளை கொன்ற குற்றவாளிகளுக்கா உங்கள் ஓட்டு, ஊழல் கும்பலை விரட்டியடிப்போம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி இதுபோன்ற பிரசாரம் செய்யப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இதுபோலவே திமுகவுக்கு எதிராக அதிமுக தவறான வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறை டிஜிபிக்கும் திமுக  சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் கடிதம் எழுதியுள்ளார்.   

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close