[X] Close

மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்தவர்கள் தண்ணீரை இலவசமாக தராதது ஏன்?- சிவகாசியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சீமான் கேள்வி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:37 am
  • அ+ அ-

இத்தேர்தல் பணநாயகத் துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே நடக்கும் போர் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அருள்மொழித் தேவன், சாத்தூர் சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுரேஷ்குமார் ஆகியோருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கோடிகளைக் கொட்டி தேர்தலைச் சந்திக்கிறவர்கள் மத்தியில் நாங்கள் உயர்ந்த கொள்கையை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கிறோம். பணநா யகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போர் இது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கட்சிகள் கூறுகின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்தபோது ஏன் செய்யவில்லை? நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எனவே, நாங்கள் வந்தால் இதை செய்வோம் என்ற கருத்தைக் கூற நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே தகுதி உள்ளது. 70 நாட்கள் சிகிச்சைபெற்ற ஜெயலலிதாவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை. கருணாநிதியை ஏன் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள்? ஏனென்றால் அரசு மருத்துவமனையில் தரமில்லை என்பதும், 70 நாளில் போக வேண்டிய உயிர் 7 நாளில் போய்விடும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.

மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்த அரசால் தண்ணீரை ஏன் இலவசமாக கொடுக்க முடியவில்லை? பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாப்பில்லை, காப்பீடு இல்லை. ராகுல் ஆட்சிக்கு வந்தால் சீனப் பட்டாசை தடை செய்வோம் என்று அவரால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close