[X] Close

மனைவியிடம் பேசக்கூட வரி போடுவார்கள்: நடிகர் செந்தில் கிண்டல்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:30 am
  • அ+ அ-

"மனைவியிடம் பேசுவதற்கு கூட வரி போடுவார்கள்" என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

சிவகங்கை அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து மானா மதுரை, திருப்புவனம், திருப்பாச் சேத்தியில் நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் சிரமப்படு கின்றனர். இந்த அரசு நீடித்தால் மனைவியுடன் பேசக் கூட வரி போடுவார்கள்.

ஜெயலலிதாவுக்கு யாரைப் பிடிக்காதோ அவர்களுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளது வெட்கக் கேடானது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூறவும் வர வில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அவருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close