[X] Close

2014-ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லை- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி


2014

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:33 am
  • அ+ அ-

2014ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லைஎன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருக்கிறார். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்த செய்யப்படாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

கடந்த 20 மாதங்களில் 0.1 சதவீதமாக உற்பத்தி சரிந்துள்ளது. நாங்கள் எச்சரித்தபடி சரிந்து கொண்டே வருகிறது. இன்னும் 2, 3 மாதங்களில் இந்திய பொரு ளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும். இந்திய நேரடி வருமானத்தில் ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரை கசக்கிப் பிழிந்தும் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனை தேர்தல் ஆணையமோ, அரசோ கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்.

பாஜக 2014-ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையே மீண்டும் புதிதாக்கி, 2019 தேர்தலிலும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

2014-ம் ஆண்டு தேர்தலில் சொன்ன எதையும் பாஜக செய்யவில்லை. ஒரே திசையில் ஓடும் நதிகளை இணைப்பது சாத்தியம். ஆனால் அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமில்லை. எதிர்க்கட்சிக்காரர்களை நோக்கித்தான் வருமான வரித் துறை ஏவிவிடப்படுகிறது. எதிர்க்கட்சியினர் மட்டுமே வசதி படைத்தவர்களாக இருப்பதாக சித்திரிக்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கும் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும். சிவ கங்கை தொகுதியில் தனி யார் தொழிற்சாலைகளை மூடிவிட்டதாகக் கூறுகின்றனர். அதற்கு காரணம் 2014-க்கு பின் வந்த ஆட்சிதான். அவர்கள் தற்போதைய எம்பியைத்தான் குறை கூற வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close