[X] Close

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அதிமுக அறிவிக்காமல் இருப்பது ஏன்?


4

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:27 am
  • அ+ அ-

-ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘சீட்’ கிடைக்காதவர்கள்தேர்தல் பணியில் ஆர்வம்காட்டாமல் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப் புள்ளதால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவிக்காமல் உள்ள தாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், ஏப்.18-ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தலுடன் இடைத்தேர்தலை அறிவித்தது. மீதி 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்ததால் தேர்தல் ஆணையம் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்.22-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்த லிலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், திமுக திடீரென்று நேற்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஏப்.22-ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், வேட்பாளர்கள் அறிவிப் புக்காக காத்திருக்காமல் தேர் தல் பணிகளை தற்போதே அந்த 4 தொகுதிகளிலும் மேற்கொள்ளு மாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

வேட்பாளர்களை தற்போதே அறிவித்தால், அவர்களைப் பிடிக்காத நிர்வாகிகள் தேர்தல் பணியில் நாட்டமின்றி ஒதுங் கிக் கொள்வார்கள். அது மக்களவைத் தேர்தல் பணிகளை பாதிக்கும். கட்சிக்குள் தற்போது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால்தான் தற்போதைக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மக்க ளவைத் தேர்தல், ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close