[X] Close
 

கடலில் இறங்கி தற்கொலை செய்யும் போராட்டம்: விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு


farmers-protest-cauvery-dispute-river-management

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, திருச்சி காவிரி ஆற்றில் மண்பானைகளை உடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் | படம்: எம்.ஸ்ரீநாத்

  • kamadenu
  • Posted: 09 May, 2018 11:41 am
  • அ+ அ-

நாகையில் வரும் 15-ம் தேதி கடலில் இறங்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலி மண்பானைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஏரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன், தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன், காவிரி பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாய சங்க நிர்வாகிகள் காவிரி தனபாலன், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜ்குமார், காவிரி டெல்டா பாசன சங்க மாநிலச் செயலாளர் பெ.ரவீந்திரன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்திருக்கும் மனுவை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் காவிரி பாசன மாவட்ட பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

மழைக்கு முன் ஏரிகள், தடுப்பணைகளை தூர் வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டின் குறுவை சாகுபடியை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வரும் 15-ம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது.

மாலை 4.30 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, விவசாய சங்க நிர்வாகிகள் காலி மண்பானைகளுடன் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி ஆற்றுக்குள் மண்பானைகளை உடைத்து, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close