[X] Close

தனுஷ்கோடி கடலோரத்தில் 20,475 ஆமை முட்டைகள் சேகரிப்பு: வனத் துறை நடவடிக்கை


dhanushkodi-turtle-preservation

வனத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு கடற்கரையில் விடப்படும் ஆமை குஞ்சுகள்.

  • kamadenu
  • Posted: 09 May, 2018 11:16 am
  • அ+ அ-

தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடல் பகுதி வரை கடந்த டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை 20,475 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான், அழகன் குளம், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி ஆகிய பகுதிகள் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் மீன்பிடிக்கும்போது கடல் ஆமைகள் பிடிபட்டால் அவற்றுக்கு எந்த பாதிப்புமின்றி கடலில் விடுவிக்க ஏதுவாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மண்டபம் வனச்சரகர் சதிஷ் கூறியதாவது:

கடல் வளத்தை பாதுகாப்பதில் கடல் ஆமைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கடல் ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம். 
இவை நாய் மற்றும் பறவைகளால் சேதமடைவதை தடுக்கும் விதமாக முட்டைகளை சேகரித்து வனத் துறையினர் குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாத்து பின்னர் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும் கடலில் பாதுகாப்பாக விடுகிறோம்.

தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடல் பகுதி வரை கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை 20,475 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டன. இதில் 17,436 முட்டைகளில் இருந்து 16,625 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. மேலும் 2,908 முட்டைகள் பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close