[X] Close
 

தாயை பராமரிப்பதாக கூறி மனைவியை பராமரிக்க கணவன் மறுக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


family-court

மதுரை உயர் நீதிமன்றம்

  • kamadenu
  • Posted: 01 May, 2018 11:53 am
  • அ+ அ-

தாயை பராமரித்து வருவதாகக் கூறி மனைவியை பராமரிக்க கணவன் மறுக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் எம்.வேலுச்சாமி. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். கணவரிடம் பராமரிப்பு செலவு கோரி ரேவதி நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு ரூ.10 ஆயிரம், மகள்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மாதம்தோறும் வழங்க உத்தரவிட்டது.

இதை மாற்றியமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனைவியும் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். மனைவி, மகளுக்கு இடைக்கால பராமரிப்பு நிதி வழங்க உத்தரவிட்டது. இதை மனுதாரர் நிறைவேற்றவில்லை. 



MGR - Kindle Edition


[X] Close