[X] Close
 

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கமல்ஹாசன்


kamal-slams-centre-over-cauvery-row

  • பாரதி
  • Posted: 27 Apr, 2018 14:59 pm
  • அ+ அ-

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அளித்த தீர்ப்பை செயல்படுத்த மேலும் 2 வார காலம் அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு மீண்டும் தள்ளிப்போட்டுள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். மத்திய அரசின் இந்த அநீதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close