[X] Close

கர்நாடகாவில் காங்கிரஸும், மஜதவும் இணைந்து பணியாற்றினால் 28 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்கலாம்: ராகுல் காந்தி, தேவகவுடா நம்பிக்கை


28

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 06:44 am
  • அ+ அ-

அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் கட்சிகள் மற்றும் அதிமுக போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி,  என் ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், மற்றக்கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக முந்திக்கொண்டு தொகுதிகளை அறிவிக்க அதிமுக தரப்பில் பாமக, தேமுதிக இடையே ஏற்பட்ட இழுபறி காரணமாக தொகுதிகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக இன்று காலை ஓட்டல் கிரவுன் பிளாசாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து தொகுதிப்பட்டியலை வெளியிட்டனர்.

ஓபிஎஸ் தொகுதி பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:

 நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019 , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் பின்வருவன:

 நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் ஏப்.18 2019 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுடன் செய்து கொண்ட நல்ல ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் பின்வருமாறு:

அதிமுக:

1. சேலம் 2 நாமக்கல் 3 கிருஷ்ணகிரி, 4. ஈரோடு 5. கரூர் 6. திருப்பூர் 7.பொள்ளாச்சி, 8. ஆரணி, 9. திருவண்ணாமலை, 10. சிதம்பரம் தனி, 11. பெரம்பலூர், 12. தேனி, 13. மதுரை, 14. நீலகிரி, 15.திருநெல்வேலி,16.நாகப்பட்டினம், 17.மயிலாடுதுறை, 18.திருவள்ளூர், 19.காஞ்சிபுரம், 20.தென்சென்னை

பாமக:

1.தர்மபுரி, 2.விழுப்புரம்,3.அரக்கோணம், 4.கடலூர், 5. மத்திய சென்னை, 6.திண்டுக்கல் 7.ஸ்ரீபெரும்புதூர்

பாஜக:

1.கோவை, 2. சிவகங்கை, 3. கன்னியாகுமரி, 4. இராமநாதபுரம் 5.தூத்துக்குடி

தேமுதிக:

 1.வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருது நகர்

 தமிழ் மாநில காங்கிரஸ்: 1. தஞ்சாவூர்

புதிய தமிழகம்:  1. தென்காசி

 

புதிய நீதிக்கட்சி: 1. வேலூர்

 

அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி: 1. புதுச்சேரி

அதிமுக சார்பில்  நடைபெற இருக்கின்ற 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனு அளித்து இருக்கின்றவர்கள் நேர்காணல் இன்று நடைபெறும். அது முடிந்தவுடன் உடனடியாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். மகளிருக்கு ஜெயலலிதா வழிகாட்டியபடி உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் பாஜக சார்பில் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர், பாமக, தேமுதிக சார்பில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close