[X] Close

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வலியுறுத்தல்; சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு இளைஞர் சைக்கிள் பயணம்


youth-cycling-trip-from-chennai-to-pollachi

சமூக வலைத்தள பயன்பாடு குறித்து இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட பாலாஜி. படம்: எஸ்.கோபு

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 12:47 pm
  • அ+ அ-

பாலியல் வன்கொடுமை சம்பவங் களை தடுக்கவும், பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும் சென்னையிலிருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர் பொள்ளாச்சி வந்தடைந்தார்.

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்துள்ள ஒடையகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பாலாஜி (28). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாலியல் சம்பவத்தை கண்டித்தும், மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையதள சமூக விரோதிக ளிடம் இருந்து இளம்பெண்களைப் பாதுக்காக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எம்.பாலாஜி கடந்த 13-ம் தேதி சென்னையிலிருந்து விழுப்புரம், சேலம், அவிநாசி, பல்லடம், நெகமம் வழியாக சுமார் 545 கி.மீ சைக்கிள் பயணம் செய்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தார். தனிநபராக சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவரை பொள்ளாச்சி பகுதி இளைஞர்கள் வரவேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close