[X] Close

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: மதுரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்


bjp-candidate-list-today

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 12:33 pm
  • அ+ அ-

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

தமிழக பாஜக பொறுப்பாளராக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மண்டல அளவிலான பாஜக தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பியூஸ் கோயல் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களைப் பிடிக்கும். முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரின் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் வலிமையான ஆட்சி அமையும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. குறிப்பாக ஜி.எஸ்.டி. மூலம் ஏற்பட்ட சீர்திருத்தத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் புரிந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நாளை (இன்று)வெளியிடப்படும் என்றாா்.

பின்னர் மதுரை சிந்தாமணி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மண்டல அளவிலான பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசினார். இதில் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது?, தமிழகத்தின் வளர்ச்சி, விவசாயம். கல்வி, பெண்கள், தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close