[X] Close

செய்தி சேனல்களை சிறையில் ஒளிபரப்பக் கூடாது: சிறைத்துறை தலைவர் உத்தரவு


do-not-broadcast-news-channels-in-jail

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 12:31 pm
  • அ+ அ-

தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் தமிழ் செய்தி சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் அண்மையில் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

27 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருப்பதால் மன உளைச்சல் அடைந்துள்ளேன். என்னைப் போன்ற சிறைவாசி களுக்கு சிறையில் டிவி பார்ப்பது தான் பொழுதுபோக்கு. சிறையில் காலாவ தியான ஆண்டனா முறையில் டிவி ஒளிபரப்பு நடைபெறுகிறது. அதில் இந்தி மொழி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது. தமிழ் செய்திகள், தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதில்லை.

இதனால் பிற சிறைகளில் இருப்பதுபோல் மதுரை மத்திய சிறையிலும் டிஜிட்டல் முறையில் பொதிகை உட்பட அனைத்து தமிழ் டிவி சேனல்களையும் ஒளிபரப்ப வேண்டும். இது தொடர்பாக சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக உரிய முடிவெடுக்க சிறைத் துறைக்கு ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். இந்நிலையில் அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு சிறைத் துறை தலைவர் ஆசுதோஷ் சுக்லா, சிறை கண் காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப் பதாவது: அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறைகள், புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை ஒளிபரப்பு செய்ய அனைத்து சிறை கண்காணிப்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். செய்தி சேனல்களை ஒளி பரப்பக் கூடாது எனவும் தெரி விக்கப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close