[X] Close

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி: விரைவில் முடிவு


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 18:44 pm
  • அ+ அ-

மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சீட் கேட்டு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவா ளர்கள் மோதுவதால் அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.

அதிமுக ஆட்சியைத் தக்க வைக்க நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும். இதனால், இடைத் தேர்தலுக்கு அதிமுக தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலவழிக்க தகுதி உள்ளவர்களுக்கே சீட் என தலைமை தெரிவித்துள்ளது. இருந்தும், மானாமதுரை தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மாரிமுத்து, திருப்புவனத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பாக்யலட்சுமியின் கணவர் அழகுமலை, இளையான்குடியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பாஸ்கரன் உள்பட 13 பேர் சீட் கேட்டுள்ளனர்.

இதில் அனைவருமே தலைமை கூறிய தொகையை செலவழிக்கத் தயாராக உள்ளனர். 13 பேரில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஓபிஎஸ் ஆதரவாளராகவும், மற்றவர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். இதனால் குணசேகரன் ஓபிஎஸ் மூலமாகவும், மற்றவர்கள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மூலமும் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையே கட்சி நிர்வாகிகள் சிலர், 13 பேரையும் தவிர்த்து பிரபல நபரை நிறுத்தும்படி தலைமையிடம் வலியுறுத்தி வருவதால், வேட்பாளர் தேர்வில் அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close