[X] Close

மதிமுக வேட்பாளர் அறிவிப்பு: ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டி


mdmk-candidate-notice

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 12:10 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திமுககூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த குமாரவலசு என்ற ஊரைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது ஈரோடு பெரியார் நகரில் வசிக்கிறார்.

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்தவர். 1978-ல்திமுக மாணவர் அணி இணை அமைப்பாளர், 1984-ல் திமுக மாவட்ட செயலாளர், 1989-ல் மொடக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்தவர்.

1998 மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியிலும், 2009 தேர்தலில் ஈரோடு தொகுதியிலும் வெற்றி பெற்ற கணேசமூர்த்தி தற்போது ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close