[X] Close

வீழ்த்த முடியுமா? கோலிக்கு சவால் - ஜானி பேர்ஸ்டோ சதம், வார்னர் ஜோடியின் புதிய ஐபிஎல் சாதனை


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 17:17 pm
  • அ+ அ-

மதுரையில் தனியார் கல்லூரியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் விஷம் குடித்ததில் இருவர் இறந்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூவரும் மூன்றாம் பாலினத்தவராக மாற முயற்சித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் பரத், மதுரை பிபி குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, செல்லூரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் பிரிவில் முதலாம் ஆண்டு படித்துவந்தனர்.

இவர்கள் மூவரும் நெல்பேட்டையில் கடந்த மார்ச் 1-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பரத் கடந்த 1-ம் தேதி இரவு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் இறந்தார். இதுதொடர்பாக செல்லூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். தொடர் சிகிச்சையில் இருந்த முத்துப்பாண்டி சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். பழனிக்குமார் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செல்லூர், தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

தனியார் கல்லூரியில் படிக்கும் பரத், முத்துப்பாண்டி, பழனிக்குமார் ஆகிய 3 பேரும் நெல்பேட்டையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பெண் எஸ்ஐ ஒருவர் விசாரிக்கச் சென்றபோது 3 பேரும் இணைபிரியாத நண்பர்கள் எனவும், மூன்றாம் பாலினத்தவராக மாறுவதற்கான முயற்சியில் இருந்ததாகவும் தெரிகிறது. மாணவர்கள் கேலிஇவர்களது நடத்தையை கல்லூரியில் பிற மாணவர்கள் அடிக்கடி கேலி செய்ததால், விரக்தியில் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இவர்களது தற்கொலைக்கு ராகிங் போன்று வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள், கல்லூரியில் சக மாணவர்களின் ராகிங் கொடுமையால்தான் தங்கள் மகன்கள் உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தல்லாகுளம் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். அண்ணாநகர் உதவி ஆணையர் அசோகன் கூறுகையில், மாணவர்கள் இறப்புக்கு ராகிங் கொடுமைதான் காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுபற்றி விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close