[X] Close

துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி? - அமைச்சர் ஜெயக்குமார் சந்தேகம்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 16:11 pm
  • அ+ அ-

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சந்தித்தார்.

சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று, அங்கு பங்காரு அடிகளாரை சந்தித்தார். அப்போது பங்காரு அடிகளாருக்கு ராமதாஸ் பூங்கொத்து கொடுத்தார். பின்னர், பங்காரு அடிகளார் தனது பிறந்தநாள் விழா மலரை ராமதாஸுக்கு பரிசாக வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ராமதாஸ், பங்காரு அடிகளாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், பத்மஸ்ரீ விருது பெற்றதற்கும் பாராட்டு தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது ராமதாஸ் மனைவி சரஸ்வதி, நேர்முக உதவியாளர் நடராஜன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கான காரணம்இந்தச் சந்திப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் நேர்முக உதவியாளர் நடராஜனிடம் கேட்டபோது, "பங்காரு அடிகளார் பிறந்தநாளன்று அவரைச் சந்திக்க முயற்சி செய்தோம். அன்றைய தினம் அவர் மவுனவிரதம் இருப்பதாக தெரிவித்ததால் சந்திக்கவில்லை. இப்போது சென்னை சென்று வரும்வழியில் சந்தித்தோம். அவரது பிறந்தநாளுக்கும், பத்மஸ்ரீ விருது பெற்றதற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்" என்றார்.

சர்ச்சைகள் தவிர்ப்புபங்காரு அடிகளாரை முக்கிய நபர்கள் சந்திக்கும்போது அது தொடர்பான தகவல் மேல்மருவத்தூரில் இருந்து வெளியிடப்படும். இந்தச் சந்திப்பு குறித்து எந்தக் குறிப்பும் பத்திரிகைகளுக்கு கூட அனுப்பப்படவில்லை. பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியும், பங்காரு அடிகளாரும் இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் பரப்பிவிட்டனர்.

தேர்தல் நேரத்தில் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்குவதைத் தவிர்க்க, இந்தச் சந்திப்பு குறித்த தகவல் வெளியிடுவது தவிர்க்கப்பட்டதாக மேல்மருவத்தூருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close