[X] Close

18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விரைவாக முடிவு எடுக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மீண்டும் மனு


18-legislative-constituencies

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 11:35 am
  • அ+ அ-

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் சேர்த்து ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. மக்களவைத் தேர்தலுடன் இந்த21 தொகுதிகளுக்கும் தேர்தல்நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவைதவிர மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, 21 தொகுதிகளுக்குமே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த 11-ம் தேதி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அன்றே, உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, 2 வாரத்துக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணைத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக வழக்கறிஞர்கள்

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை திமுக மீண்டும் நாடியுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், திமுக மாநிலங்களவை எம்பி.க்கள் திருச்சி சிவா, டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், 18 தொகுதிஇடைத் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதிமார்ச் 26-ம் தேதியுடன் முடிகிறது.

எனவே, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக் குறி்ச்சி சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்கவேண்டும். தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close