[X] Close

'வசந்தமாளிகை’யில் நடித்த போது சிவாஜிக்கு 45 வயது ; சித்ரா லட்சுமணன் பெருமிதம்


45

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 15:01 pm
  • அ+ அ-

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் மார்ச் 15-ம் தேதி மட்டும், ரூ.73 லட்சத்து 85 ஆயிரத்து 335 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.4 கோடியே 88 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரியில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 28 லட்சம், நெல்லை யில் ரூ.93 லட்சத்து 62 ஆயிரம், திருவாரூரில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவ ணங்கள் அளித்தவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டு பணம் திருப்பியளிக் கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க உருவாக்கப்பட்ட ‘சிவிஜில்’ கைபேசி செயலி மூலம் தமிழகம் சார்ந்து 297 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 38 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 81 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை, தவறான புகார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பெறப்படும் இந்தப் புகார்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

புதிய வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 லட்சத்து 7 ஆயிரத்து 547 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 5 லட்சத்து 22 ஆயிரம் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் அதி காரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 ஆயிரத்து 628 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண் ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் விவரங்கள், புகார்கள் தொடர்பாக ‘1950’ என்ற கட்டணமில்லா எண் ணுக்கு 48 ஆயிரத்து 155 அழைப்பு கள் வந்தன. இவற்றில் விவரங்கள் கோரி 44 ஆயிரத்து 250 அழைப்புகள் வந்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியா ளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சி யில் மாணவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற் கொண்டதாகக் கூறிய பாஜக புகார் மீதான நடவடிக்கை?

இதுதொடர்பாக, மாவட்ட தேர் தல் அதிகாரியிடம் அறிக்கை கேட் கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி தவிர வேறு யாராவது பங்கேற்கிறார்களா?

நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்துக் கொடுத்துள்ளார். அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

பாலியல் வழக்கில் மாவட்ட எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதே?

இதுதொடர்பாக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் எஸ்பி மீது மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மீறக்கூடாது. எனவே, அரசு முடிவெடுத்து எங்களிடம் தெரிவிக்கும். நாங்கள் அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

தேர்தல் அதிகாரிகள் கூட்டம்

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தல் வாக்குப் பதிவு அன்று பாதுகாப்பு தொடர்பாக சத்யபிரத சாஹூ தலைமையில், தலைமை் செயலகத்தில் 18-ம் தேதி (நாளை) ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பி.க்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் பங்கேற்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close