[X] Close

சென்னையில் போட்டியிட தயங்கும் அதிமுக: தென் சென்னையில் மட்டும் போட்டியிட முடிவு


opposing-admk-to-compete

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 10:59 am
  • அ+ அ-

அதிமுக கூட்டணியில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் வடசென்னையை தேமுதிகவுக்கும், மத்திய சென்னையை பாமகவுக்கும் ஒதுக்கிவிட்டு, தென்சென்னையில் மட்டும் அதிமுககளம் காண்கிறது.

சென்னையை பொறுத்தவரை கடந்த காலங்களில், அது திமுகவின்கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. சென்னையில் உள்ள 3 மக்களவை மற்றும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில், திமுக வெற்றி பெற்றுவந்தது. முன்னாள் முதல்வர்எம்ஜிஆர் காலத்திலேயேகூட, தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, சென்னையில் சொற்பமான இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

பின்னர் ஜெயலலிதாவின் காலத்திலும், சென்னையில் ஆர்.கே.நகர் போன்ற ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்றதொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கிவிடுவது வழக்கம். ஆனால், கடந்த 2011-ம் ஆண்டுநிலைமை மாறியது. முந்தையதேர்தல்களில் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடியதிமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதிகூட, 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவாரூருக்கு மாறினார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் அதிமுக, 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடந்த, 2014- மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து நின்றபோது, சென்னையின் 3 மக்களவை தொகுதிகளிலும் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றது.

ஆனால் இந்த மக்களவை தேர்தலில், தென்சென்னையை மட்டும்வைத்துக் கொண்டு, மற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தாரை வார்க்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் 16 தொகுதிகளில், 10 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. 6 தொகுதிகளை மட்டுமே அதிமுகவால் வெல்லமுடிந்தது. அதன்பின், ஜெயலலிதாவின் மறைவால் ஆர்.கே.நகர்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற முடியவில்லை.

இதை கருத்தில் கொண்டே, இம்முறை, சென்னையில் போட்டியிட தயங்கும் அதிமுக மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடாமல், கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close