[X] Close

பரிசுப்பெட்டி மூலம் பட்டுவாடா என காண்பித்தால் டிடிவிக்கு ஆதரவு என்பதா? ம.நீ.மய்யம் வேட்பாளர் ஆவேசம்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 14:15 pm
  • அ+ அ-

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை பத்திரப்படுத்தி, தேவைப்படும்போது நீதிமன்றங்களில் ஒப்படைக்க, அனைத்து காவல்நிலையங்களிலும் லாக்கர் வசதியை ஏற்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை டிபி சத்திரத்தில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 7 மாத சிறை தண்டனையை எதிர்த்து தன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நடந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப் பொருள் 26 நாட்கள் கழித்தே விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதை காவல் துறையினர் மாற்றியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து, கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து டிஜிபி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பாதுகாப்பு கிடங்குகள்அதன்படி டிஜிபி தாக்கல் செய்திருந்த அறிக்கையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க சென்னை, திருச்சி,கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ரூ.59.78 லட்சம் செலவில் பாதுகாப்பு கிடங்குகள் அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை பத்திரப்படுத்தி, தேவைப்படும்போது நீதிமன்றங்களில் ஒப்படைக்க ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தனியாக லாக்கர் வசதியை ஏற்படுத்த வேண்டும். பறிமுதல் செய்த மறுநாளே அவற்றை சம்பந்தப்பட்ட நீதித்துறை குற்றவியல் நடுவர் முன்பாகசமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் எடையளவை குற்றவியல் நடுவர்கள் உறுதி செய்ய வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close