[X] Close

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் : ஐபிஎல் நிர்வாகம் அதிரடி


12

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 14:05 pm
  • அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ‘சக்தி’ திட்டத்தின் கீழ் தொண்டர்களிடம் அகில இந்தியகாங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சித் தலைமை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘சக்தி’ திட்டம் மூலம் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளது. அதில் 45,000 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ், ‘சக்தி’ திட்டத்தின் மாநிலத் தலைவர் டி.செல்வம் கூறியதாவது:

வழக்கமாக விருப்ப மனு பெற்று,நேர்காணல் செய்து வேட்பாளரைத் தேர்வு செய்வது வழக்கம். தொண்டர்களிடம் கருத்து கேட்பதில்லை என்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் இருந்தது. அவ்வாறு கருத்து கேட்டாலும், மாநில நிர்வாகிகள் மூலமாகத்தான் தொண்டர்கள் கருத்துகள் தலைமைக்குச் செல்லும். அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியாது.

இதைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதல் முறையாக தொண்டர்களின் கருத்தை நேரடியாக கேட்பதற்காக ‘சக்தி’ திட்டத்தை ராகுல் காந்தி உருவாக்கியுள்ளார்.

இத்திட்டம் தமிழகத்தில் கடந்தஜனவரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொண்டர்கள் தங்கள் வாக்காளர் அட்டை எண்ணை 8828843022 என்ற கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அவ்வாறு இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரம் தொண்டர்கள் சக்தி திட்டத்தில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் 44,000 தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளான கன்னியாகுமரியில் 38,415, ஆரணியில் 11,884, திருவள்ளூரில் 10,317, திருச்சியில் 10,314,சிவகங்கையில் 10,065, கிருஷ்ணகிரியில் 5,578, தேனியில் 5,264, கரூரில் 4,836, விருதுநகரில் 3,630 தொண்டர்கள் இணைந்துள்ளனர். தொடர்ந்து தொண்டர்கள் இணைந்து வருகின்றனர்.

ஒரு குடும்பத்தில் அனைவரும் கைபேசி வைத்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கைபேசியில் ஒரு தொண்டர் மட்டுமே இணைய முடியும். அதனால் எண்ணிக்கை குறைவாகத் தெரியலாம். ஆனால் தொண்டர்கள் அதிகம்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் தொகுதி போட்டியிடும் விவரம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், காங்கிரஸ் தலைமையில் இருந்து, ‘சக்தி’ திட்டத்தில் இணைந்த அனைத்து தொண்டர்களுக்கும், அழைப்பு மூலமாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் ஆடியோ சென்றுள்ளது.

அதில் இந்த தொகுதிகாங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம். 10 விநாடிகளில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒரே ஒருமுறைமட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பலர் பல்வேறு காரணங்களால் அழைப்பை எடுக்க முடியவில்லை. பலரால் 10 வினாடிகளில் யோசித்து பதில் அளிக்க முடியவில்லை. இருப்பினும் 10 தொகுதிகளிலும் 45,000 பேர் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக மாநிலத் தலைவர்கள் யாருக்கும் தெரியாது. கட்சித் தலைமைக்கு மட்டுமே தெரியும்.

வேட்பாளர் தேர்வில், வேட்பாளர்கள் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்படும். அதில்தொண்டர்களின் கருத்து முக்கிய அம்சமாக இருக்கும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close