[X] Close

திமுக - அதிமுக 8 தொகுதிகளில் ‘நேருக்குநேர்’ போட்டி


dmk-admk-8

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Mar, 2019 10:53 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

திமுகவும் அதிமுகவும் எட்டு தொகுதிகளில் நேருக்கு நேராக போட்டியிடுகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைசிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தது திமுக.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக முதலான கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் நிற்கின்றன என்பது உறுதிசெய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில், இந்த அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டனர். அப்போது பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா முதலானோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக நிற்பதைப் போல, அதிமுகவும் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்த 20 தொகுதிகளில், எட்டு தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாகப் போட்டியிடுகின்றன. தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய எட்டு தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டி போடுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close