[X] Close

மக்களவை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 19-ம் தேதி தொடக்கம்


18-legislative-constituencies

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 10:50 am
  • அ+ அ-

மக்களவை மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே, அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பு மனு தாக்கலும் தொடங்குகிறது.

வேட்பு மனுக்களைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பொது வேட்பாளர்கள் ரூ.25,000 வைப்புத் தொகையாக மனுவுடன் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ.12,500 செலுத்த வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட, மனுவுடன் பொது வேட்பாளர் ரூ.10,000, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.5,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

இந்த வைப்புத் தொகையை, ரொக்கமாகவோ, ரிசர்வ் வங்கி செலானாகவோ செலுத்தலாம். காசோலை ஏற்கப்படாது.

5 பேருக்கு மட்டுமே அனுமதிவேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் அருகில்100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கச் செல்லும்போது, வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் எனமொத்தம் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 26-ம்தேதி முடிவடைகிறது. வேட்பு மனு படிவத்தை, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close