[X] Close

சீமான் ஆடியோ சர்ச்சை- நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பதிலடி


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 13:20 pm
  • அ+ அ-

இளைஞர்களால் உருவாக்கப் பட்ட புதிய உதயம் என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் அக்கட்சியின் தலைவர் எஸ்ஆர்டி சிவசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எங்களுடைய கட்சியில் மாணவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என 86 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது, முற்றிலும் படித்த இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கமாகும். தமிழகத்தை உலக அளவில் எடுக்காட்டாக விளங்கும் மாநிலமாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இதுவரை யாருக்கும் ஆதரவும் அளிக்கவில்லை.

அரசு ஊழியர்களின் பணபலன்கள் நிலுவை, மின்சார திட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் 26 முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

நேரம் கிடைத்ததும் நேரில்சந்தித்து, முதல்வரிடம் முறையிடுவோம். 6 மாதத்தில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஒத்துழையாமை இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close