[X] Close

4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்; தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு


4

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 12:29 pm
  • அ+ அ-

கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் கடந்த இரு வாரங்களாக காய்கறி விலை உயர்ந்து வந்தது. இதற்கிடையில் நேற்று பல காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தது.

அதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் நேற்று ரூ.25 ஆகவும், ரூ.25-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய், ரூ.18 ஆகவும் விலை குறைந்துள்ளது. மேலும் முள்ளங்கி ரூ.10, பாகற்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.14, கேரட் ரூ.15, பீட்ரூட் ரூ.16, பச்சை மிளகாய் ரூ.22, சாம்பார் வெங்காயம் ரூ.25 என விலை குறைந்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக காய்கறிகள் சற்று அதிகமாக வருகின்றன. அதன் காரணமாக அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தற்காலிகமானது தான். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close