[X] Close

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு


sexual-abuse-case

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 07:20 am
  • அ+ அ-

தமிழகத்தில் சமீபகாலமாக பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள் ளன. இந்த குற்றங்களை தடுக்க வும், குற்ற வழக்குகளில் விசாரணை நடத்தவும் புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கி யுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குழந்தைகள், பெண் களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க காவல்துறையில் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமை யில் 3 எஸ்பிக்கள் செயல்படுவார் கள். சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்ற வாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும். குழந்தைகள், பெண்களுக்கு எதி ரான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த அமைப்பு விசாரிக்கும். தற் போதைய ஏடிஜிபி அருணாச்சலம் தலைமையில் இந்த விசாரணை பிரிவு செயல்பட உள்ளது” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close