[X] Close

தண்டனையில் பாரபட்சமா?- நீலகிரி காவல்துறையில் புகைச்சல்


nilgiri-police-station-issue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Apr, 2018 13:59 pm
  • அ+ அ-

உதகை நகர காவல்நிலைய காவலர் பஞ்சாயத்தில் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தண்டனையில் பாரபட்சம் காட்டப்படுவதாக நீலகிரி காவல்துறையில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகர காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய ரவீந்திரன், பஞ்சாயத்துக்கு வந்த காவலர் மனைவியிடம் நெருங்கி பழக, காவலர் தனது வீட்டிலிருந்த ஆய்வாளரின் உடமைகளோடு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

காவல்துறைக்கு அவபெயர் ஏற்படும் என்பதால் காவலர்களின் பஞ்சாயத்து சப்தமில்லாமல் முடிக்கப்பட்டது.
காவலர் இந்த விஷயம் குறித்து வெளியில் பேச கூடாது என வாய் பூட்டு போடப்பட்டது. ஆய்வாளரை தேவாலா காவல்நிலையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். 

அந்த காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் ராஜவேலு உதகை நகர காவல்நிலையத்துக்கு பணியமர்த்தப்பட்டார். நகர டிஎஸ்பி திருமேனி, ‘ஆய்வாளர் விவகாரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்ற மட்டுமே கூறி கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், ஆய்வாளர் மீதான புகாரை சப்தமில்லாமல் முடித்து, பணியிட மாற்றம் மட்டுமே செய்தது நீலகிரி காவல்துறையில் காவலர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வாளருக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா? என வடிவேல் பாணியில் கேள்வி எழுப்புகின்றனர் காவலர்கள்.

காவலர்கள் கூறும் போது, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக-கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் பணியாற்றிய காவலர்கள், சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
இது குறித்து நாளிதழில் செய்தி வந்ததும், காவல்துறைக்கு களங்கம் ஏற்பட்டதாக கருதி எஸ்.பி., சோதனைச்சாவடியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும், அந்த காலக்கட்டத்தில் சோதனை சாவடியில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இப்போ ஆய்வாளர் செய்தது காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக?. காவலரின் மனைவியின் அறியாமையை பயன்படுத்தி, அவருடன் ஆய்வாளர் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். ஆய்வாளர் என்பதால் சப்தமில்லாமல் விசாரணை நடத்தி விட்டு, தண்டனை என்ற பெயரில், டிரான்ஸ்ஃபர் மட்டும் செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.

நீலகிரி மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா கண்டிப்பாக செயலாற்றினாலும், அமைதியாக இருந்த மாவட்டத்தை மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள மாவட்டமாக பிம்பத்தை ஏற்படுத்தியதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆய்வாளர் விவகாரம் எஸ்.பி., மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

ஆர்.டி.சிவசங்கர்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close