[X] Close

மீனவர்களை அவமதித்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்: பாஜக, மார்க்சிஸ்ட் கண்டனம்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:20 am
  • அ+ அ-

20 மாவட்டங்கள் அடங்கிய தென் மண்டல திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சட்டத் துறை செயலாளர் ஆர்.கிரிராஜன் முன்னிலை வகித்தார்.

இதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது:ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 200 கி.மீ தொலைவுக்கு பரந்து, விரிந்துள்ளது. அதேபோல, வாக்குச்சாவடிகளும் அதிகரித்துவிட்டன. எனவே, அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வழக்கறிஞர்கள் பாடுபட வேண்டும். வருங்காலத்தில், திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் பதவி வழங்கப்படும் என்றார்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். விடுபட்டுள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகரச் செயலாளர் அன்பழகன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஓம்பிரகாஷ், மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவரணி கூட்டம்முன்னதாக, திமுக மாணவரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாநில மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய, மாநில பல்கலைக் கழகங்களில் துறைவாரியாக இடஒதுக்கீடு முறை அறிவிக்கப் பட வேண்டும். ஊராட்சிகள், பேரூ ராட்சிகள் நடத்தும் பள்ளிகளை மூடாமல், மாணவர் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாணவரணி மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி.எம்.ஆனந்த் வரவேற்றார். முடிவில், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ப.சரவணன் நன்றி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close