[X] Close

பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு மோடிக்கு ஆதரவாக 30 நாட்டில் பிரச்சாரம்


30

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:16 am
  • அ+ அ-

மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரி வண்ணார்பேட்டையிலுள்ள அக்கட்சி அலுவலகம் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து, கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, திருநெல்வேலி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து, திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் அருகில் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கூடி, திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதையடுத்து, கட்சி அலுவலக வாசல் அருகே நின்று சிறிது நேரம் கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர். இதி்ல் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, “திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். திமுகவுக்கு ஒதுக்கப்பட்டாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றுவோம்” என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close