[X] Close

பிஹார் பலாத்கார வழக்கில் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு


21

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:15 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் இதுவரை வெற்றிபெறாத தென்காசி தொகுதியில், 28 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை திமுக போட்டியிடுகிறது.

தென்காசி மக்களவைத் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் 9 முறை வெற்றி காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், 1957 முதல் 1991 வரை 9 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த எம்.அருணாசலம் தொடர்ச்சியாக 6 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளார். அதில், 5 முறை காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறை தமாகா சார்பிலும் அவர் போட்டியிட்டார். இதுதவிர, அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், திமுக நேரடியாக போட்டியிட்ட 2 முறையும் தோல்வியையே தழுவியுள்ளது.

தொண்டர்கள் உற்சாகம்கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பின்னர் இத்தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியது. 28 ஆண்டுகள் கழித்து தற்போது திமுக களம் காண்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக போட்டியிடுவதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தென்காசி தொகுதியில் திமுக இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை மாற்றி முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் களப்பணியாற்ற தயாராகி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும், அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இங்கு போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார்.

தமிழக அரசியலில் பரம எதிரிகளாக இருக்கும் திமுகவும், அதிமுகவும் தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரை நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இந்த முறையும் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜா, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை, கடையநல்லூர் ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடி மகன் தனுஷ்குமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.பி.கே.துரை, டாக்டர் சுமதி, டாக்டர் ராணி, வங்கி அதிகாரி ரவிச்சந்திரன், பாளையங்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் கனகராஜ், குருவிகுளம் ஒன்றிய முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், மகளிரணி துணை அமைப்பாளர் பராசக்தி உட்பட 22 பேர் விருப்பமனு அளித்துள்ளனர்.

அவர்களில், தனுஷ்குமார், ராஜா, பொன்ராஜ் ஆகிய மூவரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, அமமுகவும் தென்காசி தொகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close