[X] Close

ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தல் வாழ்வா, சாவா போராட்டக் களம்: கனிமொழி எம்பி ஆவேசம்


lok-sabha-election-campaign

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 16:24 pm
  • அ+ அ-

``ஜனநாயத்தில் நம்பிக்கை யுள்ளவர்களுக்கு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாழ்வா, சாவா போராட்டக் களம்” என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது:இந்தியா முழுவதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் இந்த தேர்தல் வாழ்வா, சாவா போராட்டக்களமாகும்.

தங்களுக்கு எதிராக இந்த நாட்டில் எந்த கட்சியும் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. மறுபடியும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமலாகிவிடும். பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் போன்றவற்றை தாண்டி ஒரு அரசியல் தலைவர் நாட்டில் இருக்க முடியாத நிலை உருவாகும். சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.

பாஜகவின் பி- டீம் தான் தமிழகத் தில் ஆட்சி நடத்தி வருகிறது. இவர்களுக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான அத்தனை உயிர்களுக்கும் நீதியையும், நியாயத்தையும் பெற்றுத் தருவோம்.

நாட்டை காப்பாற்ற, தமிழ் மண்ணை காப்பாற்ற இந்த தேர் தலை போர்க்களமாக நினைத்து போராட வேண்டும் என்றார் அவர்.

பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் சி.எஸ்.முரளிதரன், சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் முகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close