[X] Close

‘மக்களுக்கு உதவி செய்கிறோம் உபத்திரம் ஏதும் செய்வதில்லை’: அதிமுகவின் பிரச்சார வியூகம்


admk-campaign-strategy

கோப்புப் படம் | படம்: எஸ்.குருபிரசாத்

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 14:18 pm
  • அ+ அ-

மதுரை மக்களவைத் தொகுதியில் நாங்கள் மக்களை தேடிச் சென்று உதவி செய்கிறோம், மக்களைத் தொந்தரவு செய்வதில்லை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதிமுகவினர் தேர்தல் வியூகம் வகுத்துள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ் ணன், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, ஜெ., பேரவை புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவினர் வேட்பாளர் தேர்வுக்காகக் காத்திருக்காமல் முன்கூட்டியே ‘பூத்’ கமிட்டிக்கு பணம் விநியோகம், தேர்தல் வியூகம் அமைப்பது என்று தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டோம். குடிமராமத்தில் ஆரம்பித்து, முதலீட்டாளர்கள் மாநாடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பணிபுரியும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளோம்.

திமுக ஆட்சியில் மதுரையில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். ரவுடிகளை கொண்டு அடாவடியாக நன்கொடை வசூல் செய்தனர். முன்பு திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, மின்தடை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகத்தில் குறுக்கீடு இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மக்களை தொந்தரவே செய்வதில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்ல, உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்பார்கள். ஆனால், உதவிதான் செய்கிறோம். மக்களைத் தொந்தரவு செய்வதில்லை. நாங்கள் திட்டங்களைச் செய்துவிட்டு வாக்குக் கேட்கப்போகிறோம்.

எதிர்க்கட்சிகள் சொல்வதற்கு எதுவும் இல்லை. செய்துவிட்டு நாங்கள் சொல்கிறோம். செய்வது எடுபடுமா? செய்யப்போவது எடுபடுமா? செய்ததுதான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால், மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்கள் பலன் அடைந்ததை நினைவு படுத்தினாலே வாக்குகள் பெற்றுவிடுவோம். அதையே நாங்கள் மதுரை உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் வியூகமாக வகுத்துள்ளோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன திட்டங்களில் ஒரு திட்டங்களை விடாமல் முதல்வர் கே.பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close