[X] Close

ராமநாதபுரம், சிவகங்கையில் வாய்ப்பு கிடைக்காததால் மதுரையை கேட்கும் ராஜகண்ணப்பன்: அமைச்சர்கள் முட்டுக்கட்டை


rajakannappan-who-asks-madurai

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 13:09 pm
  • அ+ அ-

ராமநாதபுரம், சிவகங்கை மக்க ளவைத் தொகுதிகளை பாஜ கவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டது. இதனால், இந்த தொகுதிகளில் போட்டியிட காய் நகர்த்தி வந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தற்போது மதுரையில் போட்டியிட முயற் சித்து வருகிறார். ஆனால், அவருக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக உள்ளனர் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அதிமுகவில் அமைச்சர் பதவி வகித்து வந்த ராஜ கண்ணப்பன், அங்கிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏவானார். அதன்பின் அங்கிருந்தும் விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி யில் போட்டியிட்ட அவர், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் தோற்றார். 2011-ல் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனிடம் தோற்றார்.

தற்போது ஓ. பன்னீர்செல் வத்தின் ஆதரவாளராக உள்ள ராஜ கண்ணப்பன், சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வந்தார். ஆனால், அந்த 2 தொகுதிகளையும் பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால்தான் சார்ந்த யாதவ சமூகத்தினர் கணிசமாக உள்ள மதுரை தொகுதியை பெற ராஜகண்ணப்பன் முயற்சித்து வருகிறார். மேலும் மு.க.அழகிரி திமுக கூட்டணிக்கு எதிராக வேலைபார்ப்பார் என்பதால், அங்கு அதிமுக சார்பில் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என அவர் கருதுகிறார்.

ஆனால், அவருக்கு சீட் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டால், மதுரை அதிமுகவில் அதிகார மையம் ஆகிவிடுவார். இதனால் அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தரப்பில் முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், ஓபிஎஸ் ஆதரவுடன் மதுரையை பெற ராஜ கண்ணப்பன் தொடர்ந்து முயன்று வருகிறார் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close