[X] Close

என் பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும்: 'சூப்பர் டீலக்ஸ்' மிருணாளினி


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 18:19 pm
  • அ+ அ-

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. நேற்று அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மதிமுக ஒரு மாநிலங்களவை தொகுதியிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறது. ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தொகுதியில் வைகோ போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கணேசமூர்த்தி திமுகவில் மாவட்டச்செயலாளராக 1984-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர். 1994-ல் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்தவர்.

இரண்டுமுறை ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். பிஏபிஎல் பட்டம் பெற்றவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது மதிமுக பொருளாளராக பதவி வகிக்கிறார்.

ஈரோடு தொகுதியில் செல்வாக்குப்பெற்ற தலைவராக உள்ளவர் கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close