[X] Close

6.5 கிலோ தங்கக்கட்டிகளுடன் ஊழியர் ஓட்டம்: நகைப்பட்டறை அதிபர் புகார்


6-5

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 17:22 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், திருச்சி தொகுதியில் எஸ்.திருநாவுக்கரசர் போட்டியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்களே அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், திமுக நேரடியாக களம் இறங்க இருந்த திருச்சி தொகுதி நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாறியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இதற்காகவே திருச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி கேட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திருச்சி தொகுதியில் எஸ்.திருநாவுக்கரசர் 'கை' சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதி யில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய 2 தொகுதிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close