[X] Close

"பாகிஸ்தானை பிரித்ததற்கான பெருமையை இந்திரா காந்தி பெறமுடிந்தால், பாலகோட் தாக்குதலுக்கான பெருமையை ஏன் மோடி பெறக்கூடாது?": ராஜ்நாத் சிங் கேள்வி


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 15:28 pm
  • அ+ அ-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.நல்லகண்ணு கூறியபோது, ‘‘நாகப்பட்டினம் தொகு திக்கு எம்.செல்வராஜ், திருப்பூர் தொகுதிக்கு கே.சுப்பராயன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ எனத் தெரி வித்தார். நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் எம்.செல்வராஜ் கூறியபோது, ‘‘நாகை தொகுதி மக்களின் தேவையறிந்து மக்களவையில் பணியாற்றிய அனுபவம் ஏற்கெனவே உள் ளது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது அதற்கான தீர்மானத்தை ஆதரித்து கட்சியின் சார்பில் கையெழுத்திட்டேன். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதுடன் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பாடுபடுவேன்’’ என்றார்.

வேட்பாளர் விவரம் எம்.செல்வராஜ் ஏற்கெனவே 1989, 1996,1998 ஆகிய தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

1991, 2004, 2009 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். கட்சியில், தேசியக் குழு உறுப்பினர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது, மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

இவரது சொந்த ஊர் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி. கமலவதனம் என்ற மனைவி, செல்வப் பிரபா, தர்ஷிகா ஆகிய மகள்கள் உள்ளனர். கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தவர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close