[X] Close

துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியது: வருமான வரித்துறை


10

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 14:12 pm
  • அ+ அ-

பாலியல் விவகாரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீஸாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.

பாலியல் சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ். வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், பெண்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை தனி இடத்துக்கு வரவழைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் கடந்த 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸார், ‘பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அவை ரகசியமாக இருக்கும்,’ எனக்கூறி பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் நேற்று முன்தினம் மாலை அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டு மேற்கண்ட நபர்கள் மீது புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தொலைபேசி எண் அறிவிக்கப்பட்ட நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை 118 பேர் தொடர்பு கொண்டு சிபிசிஐடி போலீஸாரிடம் பேசியுள்ளனர். கைதான நபர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், இதில் எவ்வளவு பெண்கள் தொலைபேசி மூலம் பாலியல் புகார் அளித்தனர் எனக்கூற போலீஸார் மறுத்து விட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களின் விவரம், அவர்கள் கூறிய தகவல் போன்றவற்றை சிபிசிஐடி போலீஸார் முறையாக பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து புகார்கள் கூறி வருவதால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தவர்கள், விவரங்களை கூறியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close