[X] Close

பாலியல் வழக்கில் கைதான சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை


cbcid-police-checked

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 12:16 pm
  • அ+ அ-

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள சபரிராஜன் வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் நேற்று சென்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டில் சோதனை நடத்தினர். சபரிராஜனின் தந்தை நாகேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டனர். சபரிராஜனின் காரையும் சோதனையிட்டனர். வீட்டிலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். கடந்த 13-ம் தேதி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், வீட்டின் தரைப்பகுதி மற்றும் சுவர் போன்றவற்றை வீடியோவில் உள்ள காட்சிகளுடன் ஒப்பிட்டு தடயங்களை சேகரித்தனர். அதைத் தொடர்ந்து, சபரிராஜனின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close