[X] Close

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்த கமல்; சரமாரியாக விமர்சித்த அதிமுக பத்திரிகை


namadhu-amma-slams-kamal-hassan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Mar, 2019 11:39 am
  • அ+ அ-

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில், அதற்கு பதிலடியாக கமல்ஹாசனை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை சுட்டிக் காட்டி 'காமஹாசன்' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்றனர். 

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கமல் பதிவிட்டிருந்த ட்வீட்டை குறிப்பிட்டு 'ஜெயலலிதா மறைவை அடிமனதில் கொண்டாடிய உத்தம வில்லன்' எனப் பதிவிட்டுள்ளனர்.

தமிழக அரசு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளபோதும் திமுகவுடன் கைகோத்துக் கொண்டு தமிழக அரசின் வன்மம் கொண்டு விமர்சனங்களை முன்வைப்பதாக தாக்கியிருக்கின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இதுவரை திருநாவுக்கரசர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close