[X] Close
 

பாம்பன் பாலம் கடற்பகுதியில் கடல் நீரை உறிஞ்சுகிறதா சுழல் காற்று? வைரலாகும் வீடியோ


strange-phenomenon-viral-video

பாம்பன் பாலம் கடற்பகுதியில் விசைப்படகு மீனவர்களால் பதிவு செய்யப்பட்ட சுழல் காற்று வீடியோ காட்சிகள்.

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 11:58 am
  • அ+ அ-

பாம்பன் பாலம் கடற்பகுதியில் கடல்நீரை உறிஞ்சுவதுபோல உண்டான சுழல் காற்று வீடியோ காட்சியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் ‘ஓசியானிக் ஃபினோமினன்’ (Oceanic Phenomenon) எனப்படும் கடல் சீற்றம் ஏற்படும் என்று அறிவிக் கப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் கடற்பகுதியில் கடல் நீரை உறிஞ்சுவதுபோல உண்டான சுழல் காற்று வீடியோ காட்சி தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 

கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்ததாகவும், கடலின் காற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும்போது சுழல் ஏற்படும். மீண்டும் 2 காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது சுழல் மறைந்துவிடும். 

அதிசய நிகழ்வு

இந்த அதிசய நிகழ்வின்போது கடல்நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறிவிடும். கடலில் அரிதாக நிகழக்கூடிய இந்நிகழ்வை கடலோரப் பகுதி மக்கள், நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடலில் பயணம் செய்பவர்கள், வானியல் ஆய்வாளர்கள் பார்க்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

பாம்பன் பாலம் அருகே விசைப்படகு மீனவர்களின் மொபைலில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ‘ஓசியானிக் ஃபினோமினன்’ அறிவிப்புக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டதா? அல்லது பின்னர் பதிவு செய்யப்பட்டதா என மீனவர்களிடம் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு மீன்வளத் துறை அதிகாரிகள் கூறினர்.

- எஸ். முஹம்மது ராஃபி

தொடர்புடைய செய்திகள்

 



MGR - Kindle Edition


[X] Close