[X] Close

ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்: ராமதாஸ் இருந்த மேடையில் பாமக சின்னத்தை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 11:36 am
  • அ+ அ-

பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வழக்கில் தொடர்புடைய பிறகுற்றவாளிகளை கைது செய்வதுடன், அரசியல் குறுக்கீடுகளுக்கு இடம் தராமல் நேர்மையான முறையில் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், மதிமுக, தமுமுக, அனைத்திந்திய மாதர் சங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி - கோவை சாலையில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 5 ஆயிரம் பேர் 5 கி.மீ. தூரத்துக்கு வரிசையாக நின்றனர்.பின்னர், காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது. மனித உரிமை ஆணையம்மாநில மனித உரிமை ஆணையஉறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் பெயரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் காவல்துறை செயல்பாடு குறித்து புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் அரசுத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்பட்டால், ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றார் அவர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close